அருப்புக்கோட்டை அருகே தெரு மின்விளக்குகள் அமைக்கக் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் ஆத்திப்பட்டி கிராமம் நாராயணபுரம் பகுதியில் தெருவில்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் ஆத்திப்பட்டி கிராமம் நாராயணபுரம் பகுதியில் தெருவில் மின்விளக்குகள் அமைக்கப்படாததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 
நாராயணபுரத்தில் 8-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. ஆனால், பேருந்து நிறுத்தம் தவிர, அனைத்து பகுதிகளிலும் முறையாக மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் தங்களது  வீடுகளுக்கு முன்பாக இரவு முழுவதும் மின்விளக்குகளை எரியவிடுகின்றனர். இதில், அவர்களுக்கு அதிக மின்கட்டணம் ஆவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். 
இருப்பினும், இரவு நேரங்களில் தெருக்கள் அனைத்தும்  இருள் சூழ்ந்து காணப்படுவதால், சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், ஆண், பெண் என யாரும் வெளியில் வர முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து தெருக்களிலும் சீரான இடைவெளியில் மின்விளக்குகளைப் பொருத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என,  அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com