விருதுநகரில் இயந்திரத்தில் சிக்கிய பெண் தொழிலாளி விரல்கள் துண்டிப்பு
By DIN | Published On : 05th July 2019 09:32 AM | Last Updated : 05th July 2019 09:32 AM | அ+அ அ- |

விருதுநகரில் வியாழக்கிழமை மெட்டல் ஆலையில் பணி புரிந்த பெண் தொழிலாளி ஒருவரின் கை இயந்திரத்தில் சிக்கியதில் நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்டன.
விருதுநகர் பன்னி மாடசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் சரவணக்குமார் மனைவி சுந்தரி (35). இவர், விருதுநகர் கட்டையாபுரத்தில் உள்ள ஒரு மெட்டல் ஆலையில், கடந்த 7 ஆண்டுகளாக டிரம் மூடி அடைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரி வழக்கம் போல் வியாழக்கிழமை ஆலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, அவரது கை இயந்திரத்தில் சிக்கிக் கொண்டதில் நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்டன. இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து அவரது கணவர் சரவணக்குமார் அளித்த புகாரில், தனது மனைவிக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் அஜாக்கிரதையாக இயந்திரத்தை இயக்க வைத்த ஆலை உரிமையாளர் பழனிச்சாமி மற்றும் போர்மேன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், விருதுநகர் பஜார் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.