சுடச்சுட

  

  திருத்தங்கல்-பள்ளபட்டி சாலையை  சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     திருத்தங்கல் -பள்ளபட்டி சாலை நகராட்சி சாலையாகும். இச்சாலை வழியே தீப்பெட்டி ஆலை, பள்ளி, மத்திய அரசின் கலால் வரித்துறை அலுவலகம் உள்ளிட்டவைகளுக்குச் செல்ல வேண்டும். மேலும் இச்சாலை வழியே பள்ளபட்டி, செங்கமலப்பட்டி, செல்லையநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கும் பொது மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். 
     இந்நிலையில் இச் சாலை சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. மழை நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.   சாலை பழுதாகி உள்ளதால், சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள் பள்ளங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.
  எனவே இச் சாலையை விரைந்து சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai