சுடச்சுட

  

  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீடு புகுந்து பணம் திருடிய இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
  ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் சங்கரவிநாயகர்(63).இவர் செவ்வாய்க்கிழமை தனது வீட்டிற்கு மதிய உணவிற்காக வந்தார். அப்போது தனது சட்டையை கழற்றி வீட்டில் உள்ள ஆணியில் தொங்கவிட்டுள்ளார். பின்னர், அருகில் இருந்த உறவினரிடம் பேசி விட்டு திரும்பிய போது, மர்ம நபர் இவரது சட்டையில் இருந்து ரூ.26 ஆயிரத்தை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அவரை, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மடக்கிப் பிடித்து கீழராஜகுலராமன் போலீஸில் சங்கரவிநாயகர் ஒப்படைத்தார்.
  விசாரணையில், பணத்தைத் திருடியவர் சத்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் மகன் மணிகண்டன்(33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கீழராஜகுலராமன் போலீஸார் கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai