சுடச்சுட

  

  விருதுநகரில் மருத்துவக் கல்லூரி சட்டப்பேரவை  கூட்டத் தொடரில் அறிவிக்க மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 11th July 2019 05:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், விருதுநகரில் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  விருதுநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்குழு செயலாளர்களுக்கான கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
  கூட்டத்துக்கு மாவட்ட 
  செயற்குழு உறுப்பினர் எல்.முருகன் தலைமை வகித்தார். இதில், மாவட்டத் தலைநகரில் உள்ள விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் தலைக்காயச் சிகிச்சைப் பிரிவு இல்லை. சிறுநீரகம், புற்று நோய், நரம்பியல் உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சைப் பிரிவு இல்லை. 
  இந்த நிலையில், கடந்த 2010 இல் அப்போதைய தமிழக அரசு, விருதுநகரில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தது. பின்பு, 2011 இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், மருத்துவக் கல்லூரி தொடங்கும் திட்டம் அமல்படுத்தப்படவில்லை. 2011- க்குப் பின் பல்வேறு மாவட்ட தலைநகர்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க அறிவிப்பு வெளியாகி கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளது. விருதுநகரைச் சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்ட போதும், விருதுநகர் மாவட்டம் மட்டும் தொடர்ந்து  புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, ஏற்கெனவே நடைபயண பேரணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடத்தப்பட்டு, முடிவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுக்கப்பட்டது. மேலும், தமிழக முதல்வருக்கும் அம்மனு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும், விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான  அறிவிப்பு காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. 
  எனவே, தற்போது நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் விருதுநகரில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மற்றும் அதற்கான நிதியை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai