சிவகாசி அரசுக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

சிவகாசி அரசு கலை கல்லூரியில் புதன்கிழமை குடிமக்கள் நுகர்வோர் மன்றத் தொடக்க விழா மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

சிவகாசி அரசு கலை கல்லூரியில் புதன்கிழமை குடிமக்கள் நுகர்வோர் மன்றத் தொடக்க விழா மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதல்வர்(பொறுப்பு)காமராஜ் தலைமை வகித்தார். பேராசிரியர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தை தொடக்கி வைத்துப் பேசியது:
மாணவர்களாகிய நீங்கள் கடைக்குச் சென்று மளிகைப் பொருள், மருந்துகள் வாங்கும் போது, அதில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை கவனித்து வாங்க வேண்டும். வாங்கும் பொருளுக்கு "பில்' வாங்க வேண்டும். வாங்கிய பொருள்களில் குறைபாடு இருந்தால் மாவட்ட நுகர் வோர் நீதி மன்றத்தை நாட வேண்டும்.
மாணவ மாணவிகள் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது தலை கவசம் அணிய வேண்டும். மாணவர்கள் சாலையில் உள்ள போக்குவரத்து குறியீடுகள் குறித்து அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் சாலையில் செல்லும் போது, விபத்தினை பார்க்க நேர்ந்தால் , உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.  உங்கள் அண்டை வீட்டாரிடம் சாலை பாதுகாப்பு குறித்து பேசுங்கள் என்றார். காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன், ஆய்வாளர் பாஸ்கரன், நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  
முன்னதாக ஒருங்கிணைப்பாளர் சரவணகைலாஸ் வரவேற்றார். நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் கணேசமுருகன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com