சுடச்சுட

    

    விருதுநகரில் சேதமடைந்த அரசு கட்டடத்தால் விபத்து அபாயம்

    By DIN  |   Published on : 13th July 2019 11:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர், நாராயணமடம் தெருவில் நீதிபதிகள் தங்குவதற்காக கட்டப்பட்ட அரசு கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அக்கட்டடத்தை இடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    விருதுநகர் நகராட்சி 26-ஆவது வார்டுக்கு உள்பட்ட பகுதியில் நாராயணமடம் தெரு உள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நீதிபதிகள் தங்குவதற்காக குடியிருப்பு கட்டப்பட்டது. ஆனால், அக்கட்டடம் ஒரு சில ஆண்டுகளில் சேதமடைந்ததால், அக்குடியிருப்பில் யாரும் தங்கவில்லை. 
    இதனால், பாழடைந்த அக்கட்டத்தின் கதவு, ஜன்னல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இடிந்து விழுந்த வண்ணம் உள்ளன. 
    இக்கட்டத்தின் அருகே அரசு மண்ணெண்ணெய் விநியோக நிலையம் உள்ளது. மேலும், இக்கட்டடம் பயன்பாட்டில் இல்லாததால் சிலர் இரவு நேர த்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் விளையாடும் குழந்தைகள் இடிந்த கட்டடத்தால் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயமும் உள்ளது. 
    அதேபோல், மண்ணெண்ணெய் விநியோக நிலையத்திற்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, பயன்பாடற்ற இக்கட்டத்தை இடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai