சுடச்சுட

  

  சாத்தூர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி

  By DIN  |   Published on : 14th July 2019 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சாத்தூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் சனிக்கிழமை வழங்கினார்.
     விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். சின்னகாமன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, படந்தால் அரசு மேல்நிலைப் பள்ளி, நகராட்சி மேல்நிலைப் பள்ளி, எட்வர்டு மேல்நிலைப்பள்ளி, எத்தல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி, ஒ.மேட்டுபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி இந்த 7 பள்ளிகளிலும் 1,183 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் வழங்கினார்.
   இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மோகன், அதிமுக நகரச் செயலர் வாசன் டெய்சிராணி, சாத்தூர் ஒன்றிய செயலர்கள் சண்முகக்கனி, தேவதுரை, வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலர்கள் மணிகண்டன், ராமராஜ்பாண்டியன், அதிமுக நிர்வாகிகள் இளங்கோவன், எஸ்.டி.முனீஸ்வரன், நடராஜன் உள்ளிட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  முன்னாள் மாணவ, மாணவிகள் முற்றுகை- சாலை மறியல்: சாத்தூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளான நகராட்சி மேல்நிலைப்பள்ளி, எட்வர்டு மேல்நிலைப்பள்ளி, எத்தல் ஹார்வி மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் சட்டப் பேரவை உறுப்பினரை முற்றுகையிட்டு எங்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். இதையடுத்து இன்னும் சில நாள்களில் மடிக்கணினி அனைவருக்கும் வழங்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினர் தெரிவித்தார். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதன்பின் எத்தல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எங்களுக்கு அரசின் மடிக்கணினி வழங்கியதாக முன்னதாகவே பள்ளி சான்றிதழில் சீல் வைக்கப்பட்டுள்ளது. 
   இதனால் மடிக்கணினி எங்களுக்கும் வழங்க வேண்டும் என சாத்தூர்- இருக்கன்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
  பின்னர் சாத்தூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai