சுடச்சுட

  

  பள்ளிமடம் கிராமத்தில்  ரூ.50.40 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள்:ஆட்சியர் தொடக்கி வைத்தார்

  By DIN  |   Published on : 14th July 2019 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் பள்ளிமடம் கிராமத்தில் ரூ.50.40 லட்சம் மதிப்பீட்டிலான குடிமராமத்துப்பணிகளுக்கான பூமிபூஜையில்  மாவட்ட ஆட்சியர் சிவஞானம் கலந்து கொண்டு பணிகளைத் தொடக்கி வைத்தார்.
   திருச்சுழி வட்டம் பள்ளிமடம் கிராமத்தில் கண்மாய் தூர்வாருதல், கண்மாய்க் கரைகளைப் பலப்படுத்துதல், மடைகள் சீரமைத்தல், நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைத்தல் போன்ற பணிகளுக்காக தமிழக அரசு ரூ.50.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம், குடிமராமத்துப்பணிகளை நேரில் தொடக்கி வைத்தார்.
   இந்நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
   இக்கண்மாய் தூர்வாரும் பணிநிறைவடைந்தால் அதன்மூலமாக பள்ளிமடம், கேத்தநாயக்கன் பட்டி, சூச்சனேரிப்பட்டி மற்றும் பள்ளிமடம் சுற்றுவட்டார கிராமங்கள் பயன்பெறும் என வருவாய்த்துறை  சார்பில் தெரிவிக்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai