சுடச்சுட

  

  புதிய பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க எம்.எல்.ஏ.விடம் த.மா.கா. மனு

  By DIN  |   Published on : 14th July 2019 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சாத்தூரில் உள்ள புதிய பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க சட்டப் பேரவை உறுப்பினரிடம், த.மா.கா.வினர் மனு அளித்துள்ளனர்.
    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வைப்பாற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் பணிகள் முழுமையாக முடிக்காமல் தமிழக முதல்வர் 2 ஆண்டுகளுக்கு முன் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஆனால் இன்றுவரை இந்த பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்பட வில்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. மேலும் பல்வேறு சமூக விரோத செயல்களும், குற்றச்சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன. இதனால் பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கக் கோரி த.மா.கா. சார்பில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
   இதையடுத்து சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மனிடம் பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.மா.கா. சாத்தூர் நகரத் தலைவர் டி.எஸ்.அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர். விரைவில் பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai