சுடச்சுட

  

  பெரியவாடியூரில் மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை

  By DIN  |   Published on : 14th July 2019 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பெரியவாடியூரில் குடிநீர் விநியோகத்துக்காக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் தொடர்ந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு வருவதால் அதை உடனே சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
   விருதுநகர் அருகே உள்ள பெரிய வாடியூர் கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து, பல்வேறு பிரிவுகளாக குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, நான்கு நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
   இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சுற்றுப் பகுதி சேதமடைந்து குடிநீரானது கசிந்து வெளியேறி வருகிறது. தொடர்ந்து, மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் தண்ணீர் கசிவு ஏற்படுவதால், தொட்டி உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் ஏற்படும் கசிவை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai