சுடச்சுட

  

  ராஜபாளையத்தில் சாலையில் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி

  By DIN  |   Published on : 14th July 2019 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ராஜபாளையம் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
  ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கால்நடைகள் சாலைகளின் குறுக்கே நடமாடுவதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. குறிப்பாக காந்தி சிலை ரவுண்டானா, பழைய பேருந்து நிலையம், முடங்கியார் சாலை ஆகிய பகுதிகளில் கால்நடைகள் சாலைகளின் நடுவே  இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமர்ந்துள்ளன.
  இதனால் இரவு நேரங்களில் தொலைதூரத்திலிருந்து வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai