சிவகாசி திருவள்ளுவர் மன்றம் சார்பில் ஜூலை 27 இல் ஓவியப்போட்டி

சிவகாசி திருவள்ளுவர் மன்றம் சார்பில் ஜூலை 27 ஆம் தேதி ஓவியப்போட்டி நடைபெற உள்ளது என அந்த மன்றத்தின் செயலர் எஸ்.ஏ.மோகன் தெரிவித்துள்ளார்.


சிவகாசி திருவள்ளுவர் மன்றம் சார்பில் ஜூலை 27 ஆம் தேதி ஓவியப்போட்டி நடைபெற உள்ளது என அந்த மன்றத்தின் செயலர் எஸ்.ஏ.மோகன் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாணவ, மாணவிகளின் ஓவியத்திறமையை வளர்க்கும் வகையில் இப்போட்டி நடத்தப்பட உள்ளது. இப்போட்டியில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். ஒரு பள்ளிக்கு ஒரு பிரிவுக்கு தலா இருவர் வீதம் அனுமதிக்கப்படுவார்கள். பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் 
சால மிகுத்துப் பெயின்' (பொருள்: மென்மையான மயில்தோகை ஏற்றப்பட்ட வண்டியும் கூட, அம் மயில் தோகையை அளவுக்கு அதிகமாக ஏற்றினால் அச்சு  முறிந்துவிடும்) என்ற திருக்குறளின் தலைப்பிலோ,
 நெடும்புலனுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப்பிற' (பொருள்: முதலை, அழமான நீர்நிலையில் பிற உயிர்களை வெற்றி கொள்ளும். அந்நீர் நிலையை விட்டு அது நீங்குமாயின் பிற உயிர்கள் வென்று விடும்) என்ற இரண்டு திருக்குறள்களில் ஏதாவது ஒரு தலைப்பில் ஓவியம் வரைய வேண்டும்.
 போட்டியில் பங்கேற்பவர்கள் வண்ண பென்சில்கள், கருப்பு வண்ண பென்சில்களை கொண்டு வர வேண்டும். ஓவியம் வரைவதற்கான காகித அட்டை வழங்கப்படும். இதுகுறித்த விவரங்களுக்கு 98430 51405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com