Enable Javscript for better performance
அருப்புக்கோட்டையில் சாலையை சீரமைக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டையில் மாரியம்மன் தெற்குத்தெருவில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இத்தெருவில் உள்ள தார்ச்சாலை சேதமடைந்து பல ஆண்டுகளாகி விட்டது. இதனால் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள், அதிக எண்ணிக்கையில் உள்ள மேடு பள்ளங்களால் நிலைதடுமாறி அடிக்கடி விபத்திற்குள்ளாகுகின்றன. இதே சாலையில் ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியும் உள்ளதால், இச்சாலையைத்தான் பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. இதில் சைக்கிளில் செல்லும் மாணவர்கள் தடுமாறி விழுந்து விபத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக இப்பகுதி மக்கள் அருப்புக்கோட்டை நகராட்சித் தரப்பில் பலமுறை புகார் செய்தும் சாலையை சீரமைக்க 
    நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai