Enable Javscript for better performance
காப்பீட்டு பிரீமியத்துக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக் கோரி விருதுநகரில் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    காப்பீட்டு பிரீமியத்துக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக் கோரி விருதுநகரில் பிரசாரம்

    By DIN  |   Published on : 25th July 2019 07:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாடிக்கையாளர்கள் செலுத்தும் காப்பீட்டு பிரீமியத்துக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என விருதுநகரில் காப்பீட்டு நிறுவன ஊழியர் சங்கத்தினர் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
      விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த பிரசார கூட்டத்துக்கு காப்பீட்டு ஊழியர் சங்க உறுப்பினர் பவளவண்ணன் தலைமை வகித்தார். இதில், வாடிக்கையாளர்கள் செலுத்தும் காப்பீட்டு பிரீமியத்திற்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, உடனடியாக அந்த வரியை ரத்து செய்ய வேண்டும். மேலும் பொதுத் துறை நிறுவனமான காப்பீட்டு நிறுவனங்களின் பங்குகளை விற்கக் கூடாது. முன்னதாக கிளைச் செயலர் ராஜேஷ் வரவேற்றார். கூட்டத்தில் முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தினர் மற்றும் வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தினர்,  முகவர்கள் சங்கத்தினர், அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். சுடர் கலைக் குழுவினரின் தப்பாட்டம் மற்றும் நாடகங்கள் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai