Enable Javscript for better performance
சிவகாசியில் கால்வாயை தூர்வாரக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசியில் மழைநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    சிவகாசி ஜக்கம்மாள் கோவில் பகுதியிருந்து விஸ்வநத்தம் செல்லும் சாலையில் , மழை நீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் விஸ்வநத்தம் மேற்கு பகுதியில் மழை பெய்தால், தண்ணீர் செல்வதற்கானது. 
    இந்த கால்வாயில் தற்போது பல இடங்களில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் அப்பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.
    பெரியாண்டவர் காலனி பகுதியில் இந்த கால்வாயில் பெரிய கற்களை போட்டு வைத்துள்ளனர். இதனால் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி கொசு உற்பத்தியாகி வருகிறது. கவிதா நகரைத் தாண்டி அய்யனார் காலனிப் பகுதியில் இந்த கால்வாயில்  இருபுறமும் சுவர் இன்றி உள்ளதால் பலர் ஆக்கிரமித்து உள்ளனர். 
    அப்பகுதியில் கால்வாயில் கட்டட கழிவுகள் மற்றும்  பிளாஸ்டிக் கழிவுகள் பல இடங்களில் கொட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாயை ஆக்கிரமித்து, சித்துராஜபுரம் ஊராட்சியில்  மயானம் அமைக்கப்பட்டுள்ளது. 
    இந்த மயானத்தையடுத்து நிலம் வைத்திருப்போர், கால்வாய் நடுப்பகுதியில் மண்ணைக் கொட்டி பாதையாக்கி தண்ணீரின் போக்கினை தடுத்துள்ளனர்.
    இதனால் மழை பெய்தால் தண்ணீர் சாலையில் ஓடும் நிலை உள்ளது. எனவே அந்த கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க சித்துராஜபுரம் ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai