Enable Javscript for better performance
திருத்தங்கலில் குடிநீர் கோரி பெண்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    திருத்தங்கலில் குடிநீர் வசதி செய்து தரக் கோரி புதன்கிழமை அப்பகுதி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருத்தங்கல் நகராட்சி 18 ஆவது வார்டு முத்துமாரிநகர், பெரியார் காலனி, பசும்பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் விநியோகிக்கவில்லையாம்.
    இதையடுத்து குழாய் மூலம் குடிநீர் வழங்க இயலாவிட்டால், லாரி மூலம் குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனராம். இருப்பினும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
    இதைத்தொடர்ந்து அப்பகுதி பெண்கள் சுமார் 100 பேர் , திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். தங்களது கோரிக்கையை நகராட்சி ஏற்கவில்லை எனக்கூறி, அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பாக திருத்தங்கல் - விருதுநகர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
    தகவல் அறிந்து வந்த நகராட்சி பொறியாளர் ஜெயந்தி பொதுமக்களை சமாதானப்படுத்தினார். அவர் விரைவில் தண்ணீர் வழங்கப்படும் என கூறியதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai