Enable Javscript for better performance
நகராட்சி அலுவலகத்தை ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    நகராட்சி அலுவலகத்தை ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் முற்றுகை

    By DIN  |   Published on : 25th July 2019 07:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்த ஊதியத்தை வழங்கக் கோரி புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 98 நிரந்தர துப்புரவு பணியாளர்களும், ஒப்பந்த அடிப்படையில் 47 துப்புரவு பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.208 சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. 
    இந்த நிலையில், நிகழாண்டு ஊதிய உயர்வு அடிப்படையில் நாளொன்றுக்கு ரூ. 214 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் துப்புரவு பணியாளர்கள் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் போல், நாள் முழுவதும் அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம். 
    ஆனால், உள்ளாட்சி பகுதிகளில் பணிபுரியும் தற்காலிக துப்புரவு பணியாளர்களுக்கு நளொன்றுக்கு ரூ. 435 வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது. இந்த உத்தரவை விருதுநகர் நகராட்சி நிர்வாகம் கடைப்பிடிக்காமல் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தளவு சம்பளம் வழங்கி வருகின்றனர். 
    எனவே பல ஆண்டுகளாக விருதுநகர் நகராட் சியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவு பணியாளர்களுக்கு தமிழக அரசாணை படி ஊதிய உயர் வு வழங்க வேண்டும் என புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டனர். 
    இதைத் தொடர்ந்து நகராட்சி மேலாளர் மற்றும் அலுவலர்கள் அவர்களை சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து கோரிக்கை மனுவை அளித்து விட்டுச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai