Enable Javscript for better performance
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 257 பயனாளிகளுக்கு நல உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 257 பயனாளிகளுக்கு நல உதவிகள்

    By DIN  |   Published on : 25th July 2019 07:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 257 பயனாளிகளுக்கு ரூ. 63.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம், மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், சாத்தூர் கோட்டாட்சியர் காளிமுத்து, ராஜபாளையம் வட்டாட்சியர் ஆனந்தராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள், விதவை பெண்கள், வளர்இளம் பெண்கள் உள்ளிட்டோருக்கு அரசு தரும் சலுகைகள் குறித்தும், பட்டா மாறுதல் செய்யும் முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். 
    வேளாண்மை, சுகாதாரம், கால்நடை உள்ளிட்ட துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்து பேசினர்.
    அடுத்ததாக நடைபெற்ற நலத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், முதியோர் உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய ஊனமுற்றோர் உதவித்தொகை,  இலவச வீட்டு மனை பட்டா, நத்தம் பட்டா மாறுதல், விவசாயிகளுக்கு தற்காலிக இயலாமைக்கான சான்று, வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு ரோட்டவேட்டர் கருவி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வங்கிக் கடனுதவி என 257 பயனாளிகளுக்கு ரூ. 63.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    முகாமில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை,  விவசாய உபகரணங்களுக்கான மானியம் உள்ளிட்டவைக்காக ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai