Enable Javscript for better performance
ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் புகார்

    By DIN  |   Published on : 25th July 2019 07:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே ஒழுங்கற்ற முறையில் நிறுத்தப்படும் பேருந்துகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    ராஜபாளையத்திலிருந்து புறநகர், நகரப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் வரும் பேருந்துகள் அந்தந்த நிறுத்தங்களில் முறையாக நிறுத்தப்படுவதில்லை. இதனால் காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கூட்ட நேரங்களில் பழைய பேருந்து நிலையத்தில் வெளிப்பகுதியில் வெளியூர் பேருந்துகள் குறுக்கும் நெடுக்குமாக சாலையை மறித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் பேருந்து நிலையத்துக்குள் செல்லவும், வெளியே வரவும் முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 
    எனவே பேருந்துகளை ஒழுங்கான முறையில் வரிசையாக நிறுத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai