Enable Javscript for better performance
ரோசல்பட்டியில் நூலகத்தை திறக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ரோசல்பட்டி காந்தி நகரில் பூட்டிய நிலையில் உள்ள நூலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சியில் பாண்டியன் நகர், முத்தால் நகர், காந்திநகர், ஜக்கம்மாள்புரம் முதலான பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் காந்திபுரம் பகுதியில் வாசகர்கள் பயன்பாட்டிற்காக கிளை நூலகம் தொடங்கப்பட்டது. இதில், தினசரி நாளிதழ்கள் மற்றும் நாவல், போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் ஏராளம் இருந்தன. இதன் காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கு படிக்கக் கூடிய இளைஞர்கள், இந்த நூலகத்தை பயன்படுத்தி வந்தனர். 
    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நூலகர் வராததால், நூலகம் பூட்டிய நிலையில் உள்ளது. இதனால், வாசகர்கள் நூலகத்தை பயன்படுத்த முடியவில்லை. 
     இதன் காரணமாக நூலகத்தின் முன்புறம் முள்செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளதால், நூலகத்திற்குள் புகுந்துவிட வாய்ப்புள்ளது. எனவே நூலகத்தின் முன்புறம் உள்ள முள்செடிகளை அகற்றி, நூலகத்தை பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai