Enable Javscript for better performance
விருதுநகர் மாவட்டத்தில் இலவசமாக 1.10 லட்சம்  நாட்டுகோழிக் குஞ்சுகள்- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டத்தில் இலவசமாக 1.10 லட்சம்  நாட்டுகோழிக் குஞ்சுகள்

    By DIN  |   Published on : 25th July 2019 07:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கோழி அபிவிருத்தித் திட்டத்தின் (2018-19) கீழ் ரூ.1 கோடியே 41 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் 1.10 லட்சம் இலவச நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
    விருதுநகர் மாவட்டத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற பெண் பயனாளிகளுக்கு இலவசமாக தலா 50 நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் கூண்டு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. 
    அதன்படி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 200 பயனாளிகள் வீதம் மொத்தம் 2,200 பயனாளிகளுக்கு தலா 50 கோழிக்குஞ்சுகளுடன், ரூ.2500 கொட்டகை அமைத்தலுக்கான நிதியுதவி, ஒரு நாள் பயிற்சி வகுப்பு மற்றும் பயிற்சி கையேடு முதலானவை 100 சதவீத அரசு மானியத்தில் ரூ.1 கோடியே 41 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 1.10 லட்சம் இலவச நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai