Enable Javscript for better performance
ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பில் முத்திரையிடாத  75 பால் அளவைகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பில் முத்திரையிடாத  75 பால் அளவைகள் பறிமுதல்

    By DIN  |   Published on : 25th July 2019 07:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முத்திரையிடப்படாத 75 பால்  அளவைகளை பறிமுதல் செய்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் பேரையூர் பகுதிகளில் தரப்படுத்தப்படாத மற்றும் முத்திரையிடப்படாத ஊற்றல் அளவைகள் மூலம் பால் விற்பனை செய்வதாக பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. 
    அதன் அடிப்படையில், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தொல்காப்பியன் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, உசிலம்பட்டி முதலான பகுதிகளில் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
    அப்போது, பால் கொள்முதல் செய்வோர் மற்றும் பால் விற்ப னையாளர்களிடமிருந்து முத்திரையிடப்படாத 75 ஊற்றல் அளவைகளை பறிமுதல் செய்தனர். மேலும், பேரையூர் பகுதியில் விற்பனையாளர் உரிமம் பெறாமல் ஊற்றல் அளவைகள் விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் மீது சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். 
    எனவே, பால் கொள்முதல் செய்வோர் மற்றும் பால் விற்பனை செய்வோர், தாங்கள் பயன்படுத்தும் ஊற்றல் அளவைகளை முத்திரை ஆய்வாளரிடம் கொண்டு சென்று முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai