முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
சிவகாசி அருகே பெண்ணை கம்பியால் தாக்கிய தந்தை - மகன் கைது
By DIN | Published On : 30th July 2019 08:59 AM | Last Updated : 30th July 2019 08:59 AM | அ+அ அ- |

சிவகாசி அருகே பெண்ணை தாக்கியதாக, தந்தை, மகனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சிவகாசி ரத்தினம் நகரைச் சேர்ந்த கணேசன் மகன் செல்வராஜ். இவருக்கும், நாரணாபுரம் புதூர் பகுதியைச் சேர்ந்த முத்துவின் (52) மகள் உமாமகேஸ்வரிக்கும் 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. அதையடுத்து, கணவன்-மனைவிக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், உமாமகேஸ்வரி தனது தந்தை முத்து வீட்டுக்கு வந்துவிட்டாராம்.
இது குறித்து சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து, போலீஸார் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமாதானமாகச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், உமா மகேஸ்வரி, செல்வராஜுடன் குடும்பம் நடத்த வரவில்லையாம். எனவே, செல்வராஜின் தாயார் பரமேஸ்வரி (54), தனது மருமகளை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வர முத்து வீட்டுக்குச் சென்றுள்ளார்.
ஆனால், அங்கு பரமேஸ்வரிக்கும், முத்துவுக்கும் ஏற்பட்ட தகராறில், முத்து மற்றும் அவரது மகன் சொக்கர் (22) ஆகிய இருவரும் சேர்ந்து பரமேஸ்வரியை இரும்புக் கம்பியால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த பரமேஸ்வரி, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, தந்தை, மகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.