முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
மாவட்ட கிரிக்கெட் போட்டி: ராம்கோ அணிக்கு முதல் பரிசு
By DIN | Published On : 30th July 2019 08:57 AM | Last Updated : 30th July 2019 08:57 AM | அ+அ அ- |

ராஜபாளையம் அருகே ஆலங்குளம் சிமென்ட்ஸ் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில், ராஜபாளையம் ராம்கோ கிரிக்கெட் அணி முதல் பரிசை வென்றது.
ஆலங்குளம் சிமென்ட்ஸ் கிளப் அணி சார்பில், கடந்த 4 மாதமாக 25 ஓவர் தொடர் லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் என மொத்தம் 16 அணிகள் கலந்துகொண்டன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஆலங்குளம் சிமென்ட்ஸ் அணியை வென்று, ராம்கோ கிரிக்கெட் கிளப் அணி முதல் பரிசை வென்றது. வெற்றிக்கான சுழற்கோப்பையை, அணியின் தலைவர் மணிகண்டன் பெற்றுக்கொண்டார்.