Enable Javscript for better performance
சாத்தூர் பிரதான சாலையில்போலி ஆவின் பாலகங்கள் ஆக்கிரமிப்பு: போக்குவரத்து நெரிசல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சாத்தூர் பிரதான சாலையில் போலி ஆவின் பாலகங்கள் ஆக்கிரமிப்பு: போக்குவரத்து நெரிசல்

    By DIN  |   Published On : 31st July 2019 07:40 AM  |   Last Updated : 31st July 2019 07:40 AM  |  அ+அ அ-  |  

    சாத்தூர் நகர் பகுதியில் பிரதான சாலையை ஆக்கிரமித்து போலி ஆவின் பாலகங்கள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 
      விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பிரதான சாலையில் கோயில்கள், சார்-பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம், பள்ளிகள், நீதிமன்றங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. இந்த சாலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் சாலையோரத்தில் கடைகள் தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளன. 
     இந்நிலையில், ஆவின் பாலகம் என்ற பெயரில் சாத்தூர் பிரதான சாலை மற்றும் நான்கு வழிச்சாலை பகுதிகளில் புதிது புதிதாக கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. ஆவின் பாலகமாக செயல்படும் பெரும்பாலான கடைகள் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைதுறையினரின் அனுமதியின்றியே செயல்பட்டு வருவதாகவும், ஒரு சில கடைகள் அனுமதி பெற்றதாக போலி ஆவணங்களை வைத்து செயல்படுவதாகவும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர். 
     மேலும் இது போன்ற கடைகள் சாதி சங்கம் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவோடு செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
     இதனால் சாத்தூர் பிரதான சாலையில்  போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவரச தேவைக்காக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூட எளிதில் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி வருகிறது. 
     எனவே நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைக் துறை அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் கடைகளுக்கு அனுமதி வழங்குமாறு சாத்தூர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் விஜயகுமார் கூறியது: சாத்தூர் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட  தேநீர் கடைகள் இருந்தாலும் ஆவின் பாலகம் என்ற பெயரில் அதிகளவில் கடைகள் அமைத்துள்ளனர். ஆவின் பாலகம் என்ற பெயரில் உள்ள கடைகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு கடைகளாக உள்ளன. இந்த கடைகள் சாலை வரை வைக்கப்படுவதால் போக்குவரத்துக்கு பெரிதும் இடையூறாக உள்ளன.  எனவே மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுத்து நகர் பகுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp