சிவன் கோயில்களில் பிரதோஷ பூஜை
By DIN | Published On : 01st June 2019 07:44 AM | Last Updated : 01st June 2019 07:44 AM | அ+அ அ- |

ராஜபாளையம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதையொட்டி, மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, தெற்குவெங்காநல்லூர் சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், மாயூரநாதசுவாமி திருக்கோயில் அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஆகிய சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.