சுடச்சுட

  

  கொல்லபட்டி வழியாக இருக்கன்குடி செல்லும் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

  By DIN  |   Published on : 14th June 2019 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாத்தூர் கொல்லபட்டியிலிருந்து இருக்கன்குடி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
        விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பழைமையான இருக்கன்குடி மாரியம்மன் கோயில், வைப்பாறு, அர்ச்சுனா நதி இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
        சாத்தூரிலிருந்து இருக்கன்குடிக்கு ரயில்வே பீடர் சாலை  வழியாக வாகனங்கள் செல்கின்றன. கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலிருந்து பெரியகொல்லபட்டி வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. பெரியகொல்லபட்டி வழியாகச் செல்லும் வாகனங்களுக்காக நீர்த்தேக்க அணையின் கரையோரப் பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக கற்கள் பெயர்ந்து மிக மோசமான நிலையில் உள்ளது.
        இச்சாலையிலுள்ள பாலத்தின் தடுப்புச் சுவர் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்நிலையில், இச்சாலையில் இருக்கன்குடிக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 500-க்கும் மேற்பட்ட இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. 
        இச்சாலையை புதிதாக அமைக்க  இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, விரைவில் புதிய சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்களும், வாகன ஓட்டுநர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
      இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் கார்த்திக்ராஜா கூறியது: பெரியகொல்லபட்டியிலிருந்து இருக்கன்குடிக்குச் செல்லும் சாலை, அணை கட்டும் பணிக்காக பொதுப்பணித் துறையினரால் தற்காலிகமாக அமைக்கப்பட்டது. ஆனால், கோவில்பட்டி, திருநெல்வேலியிலிருந்து இருக்கன்குடி கோயிலுக்குச் செல்ல வசதியாக இருப்பதால், வாகனங்கள் சாத்தூருக்குள் செல்லாமல் பெரியகொல்லபட்டி வழியாக சென்று வருகின்றன. 
       எனவே, இச்சாலையை சரிசெய்து தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். மேலும், சாலையில் உள்ள பாலத்தில் சேதமடைந்துள்ள தடுப்புச் சுவரையும் சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai