சிவகாசியில் குடிநீர் குழாய் உடைந்து  சாலையில் ஓடிய தண்ணீர்

சிவகாசியில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிவகாசியில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகாசி - வெம்பக்கோட்டை சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் வடிகால் வாரியம், தாமிரவருணி குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதித்தது. இதனால் அப்பகுதியில் சாலை சேதம் அடைந்தது. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த சாலையில் விளம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் குழாய் இணைக்கும் பணியை மேற்கொண்டது. இதனால் அப்பகுதியில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, ஒருவாரம் கழித்து மூடப்பட்டது. 
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்தது. இதில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் இணைப்பு கொடுக்கப்பட்ட பகுதியில், ஏற்கெனவே குடிநீர் விநியோகம் செய்ய பதிக்கப்பட்ட குழாய் சேதம் அடைந்துவிட்டது. இதனை கவனிக்காமல் குடிநீர் வடிகால் வாரியத்தினர் பள்ளத்தை மூடிவிட்டனர். இந்நிலையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால், சேதம் அடைந்த குழாய் வழியே தண்ணீர் வெளியேறி சாலையில் ஓடியது. சுமார் பத்தாயிரம் லிட்டர் தண்ணீர் சாலையில் ஓடிய பின்னர் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் திங்கள்கிழமை இந்த சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. 
இதைத்தொடந்து நகராட்சி நிர்வாகத்தினர் பழுது பார்ப்பதற்காக பள்ளத்தைத் தோண்டியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 
இதுகுறித்து நகராட்சி ஊழியர் ஒருவர் கூறியதாவது, குடிநீர் வடிகால் வாரியத்தினர் செய்த தவறினால் தண்ணீர் சாலையில் வீணாகச் சென்றது. ஆனால் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தை குறை கூறுகின்றனர். இப்போது பழுது நீக்கும் பணியை தொடங்கியுள்ளோம். இந்தப்பணி முடியும் வரை அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி இருக்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com