சிவகாசியில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
By DIN | Published On : 18th June 2019 07:25 AM | Last Updated : 18th June 2019 07:25 AM | அ+அ அ- |

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் இளநிலை மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சிவகாசியில் திங்கள்கிழமை மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி, திருத்தங்கல் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டனர். சிவகாசி மற்றும் திருத்தங்கல் சுற்று வட்டாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் உள்நோயாளிகளுக்கும், அவசர சிகிச்சைகளையும் மேற்கொண்டனர்.