ராஜபாளையத்தில் வாகனம் மோதி முதியவர் பலி
By DIN | Published On : 18th June 2019 07:21 AM | Last Updated : 18th June 2019 07:21 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் வேதமாணிக்கம் (57). இவர் திங்கள்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் சதுரகிரி மலைக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார்.
ராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் வந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வேதமாணிக்கம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.