"ராஜபாளையம் -சபரிமலை ரயில் சுரங்கப்பாதை அமைக்க ஆய்வு தேவை'

ராஜபாளையம் - சபரிமலை இடையே புதிய சுரங்கப்பாதை ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மேற்கு

ராஜபாளையம் - சபரிமலை இடையே புதிய சுரங்கப்பாதை ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மேற்கு தொடர்ச்சி மலையில் ஆய்வு நடத்த வேண்டும் என சிவகாசி மூத்தோர் குடிமக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆல்பட் செல்வராஜ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
ஆண்டுதோறும் தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு மாத பூஜைகளுக்கும், மண்டல மற்றும் மகர பூஜைக்காகவும் சுமார் 25 லட்சம் பேர் சென்று வருகிறார்கள். ராஜபாளையம், செங்கோட்டை, புனலூர், பத்தனம்திட்டா வழியாகவும், திண்டுக்கல், தேனி, குமுளி, பீர்மேடு வழியாகவும், ஈரோடு, போத்தனூர், பாலக்காடு, திருச்சூர் , எர்ணாகுளம், கோட்டயம் வழியாகவும் ஐயப்பப் பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். சென்னையிருந்து மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக சபரிமலைக்கு செல்ல 12 முதல் 17 மணி நேரம் வரை ஆகும். இந்த பயண நேரத்தை குறைக்கவும், விரைவாக சபரிமலைக்கு சென்று வரவும், ராஜபாளையம் - சபரிமலை இடையே 42 கி.மீ. நீளத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய ரயில் சுரங்கப் பாதைத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்பது பக்தர்களின் கோரிக்கையாகும். இந்த திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரயில்வே துறை ஆய்வு நடத்த வேண்டும். ராஜபாளைத்திலிருந்து செங்கோட்டை நோக்கி செல்லும் போது 8 ஆவது கி.மீட்டரில் சேத்தூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 8 ஆவது கி.மீட்டரில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமும், அதன் பின்னர் 42 கி.மீ.தூரத்தில் சபரிமலையும் அமைந்துள்ளது. இப்பாதையில் சுரங்கப்பாதை அமைத்தால் சேத்தூர் வழியே சபரிமலைக்கு சில மணி நேரத்தில் செல்ல முடியும். இதனால் 7 மணி நேரப் பயணம் குறைய வாய்ப்பு உள்ளது. சுரங்கப்பாதை அமைக்கப்படும் பகுதிகளில் காடுகள் உள்ளதால் மத்திய வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். தற்போது மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் , தென்காசி, விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். வருங்காலத்தை கணக்கில் கொண்டு திட்டங்கள் தீட்டுவது அவசியமாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com