அருப்புக்கோட்டையில் யோகா தின விழிப்புணர்வு
By DIN | Published On : 22nd June 2019 07:49 AM | Last Updated : 22nd June 2019 07:49 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சந்திரா நேசனல் பள்ளியில் வெள்ளிக்கிழமை யோகாதின விழா நடைபெற்றது.
இப் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 400 மாணவ, மாணவியர் யோகாசனம் செய்தனர். அத்துடன் அவர்கள் அனைவருக்கும் யோகாசனத்தின் சிறப்புப் பலன்கள், உடல், மனரீதியாகக் கிடைக்கும் நற்பலன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளிச் செயலாளர் பி.சி.சரவணன் சிறப்புரையாற்றினார். பள்ளி முதல்வர் நன்றி கூறினார்.