சிவகாசி பாலிடெக்னிக்கில் யோகா தின சிறப்பு பயிற்சி
By DIN | Published On : 23rd June 2019 12:42 AM | Last Updated : 23rd June 2019 12:42 AM | அ+அ அ- |

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக்கில் வெள்ளிக்கிழமை சர்வதேச யோகா தின சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதல்வர் எம்.நந்தகுமார் தலைமை வகித்தார். விருதுநகர் யோகா பயிற்சியாளர் பி.முத்துமாரீஸ்வரி, யோகாவின் சிறப்பு குறித்து பேசினார். மாணவ, மாணவிகளுக்கிடையே யோகா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் பல விதமான யோகாசனங்களைச் செய்தனர்.