சுடச்சுட

  

  ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை விவசாயத் தொழிலாளர்கள் முற்றுகை

  By DIN  |   Published on : 26th June 2019 07:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அருப்புக்கோட் டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை விவசாயத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   அப்போது அவர்கள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு சுழற்சிமுறையில்  வேலை வழங்குவதை விட்டு 100 நாள்கள் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். அவ்விதம் வழங்கப்படும்  வேலைக்கான அடையாள அட்டையை தவறாமல் தொழிலாளர்களிடம் தர  வேண்டும். அரசு அறிவித்த கூலித்தொகையான ரூ.229 ஐ முழுமையாக வழங்க வேண்டும் என முழக்கமிட்டபடி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  உடனடியாக அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னரே பெண்கள்  கலைந்து சென்றனர். இப்போராட்டத்தில் பாளையம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த  சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
  ஸ்ரீவில்லிபுத்தூர்: இதேபோன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த மாவட்டப் பொருளாளர் ஜோதி லட்சுமி தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தார். சிஐடியுவை சேர்ந்த சந்தனம், சிபிஎம் நகரச் செயலாளர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் சசிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் திருமலை உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
  வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியக் குழு உறுப்பினர் பி.பரமசிவம் தலைமை வகித்தார். சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.சந்திரமோகன் தொடக்கி வைத்தார். சி.பி.எம். மாவட்டச் செயலாளர் கே.அர்ச்சுணன் போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தின் போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai