சுடச்சுட

  

  திருத்தங்கல், சுக்கிரார்பட்டி துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமை (ஜூன் 26) நடைபெற உள்ளதால் அப்பகுதிகளில்  மின்தடை ஏற்படும் என மின்வாரிய சிவகாசி செயற்பொறியாளர் டி.முரளிதரன் கூறியுள்ளார்.
  இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருத்தங்கல் துணை மின்நிலையத்திருந்து மின்சாரம் பெறும் திருத்தங்கல் நகர், செங்கமலநாட்சியார்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட் பாங்க் காலனி, சரதா நகர், பூவநாதபுரம், வடபட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரார்பட்டி துணை மின்நிலையத்திருந்து மின்சாரம் பெறும் சுக்கிரார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai