சுடச்சுட

  

  பிஎஸ்என்எல்-இல் தொலைபேசி கட்டண "பில்' அனுப்பும் நடைமுறை நிறுத்தம்: வாடிக்கையாளர்கள் அவதி

  By DIN  |   Published on : 26th June 2019 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகரில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் சிக்கன நடவடிக்கையாக வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி கட்டணப் பட்டியல் (ரசீது)  அனுப்பும் நடைமுறையை நிறுத்தியுள்ளதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
  மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.  மூலம் "4ஜி' சேவை கிடைக்காததால், ஏராளமான வாடிக்கையாளர்கள் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர். இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் நஷ்டமடைந்து வருவதாக ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். 
  இந்நிலையில், தொலைபேசி மற்றும் இணையதளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் சார்பில் மாதந்தோறும் அவர்கள் பயன்படுத்திய சேவைக்கு கட்டணம் வசூலிக்கும் வகையில்  கட்டணப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கடைசி தேதி மற்றும் அதன் விவரம் அறிந்து கட்டணங்களை செலுத்தி வந்தனர். 
  ஆனால், கடந்த மே மாதம் முதல் வாடிக்கையாளர்களுக்கு ரசீது அனுப்புவதை அந்நிறுவனம் நிறுத்திவிட்டது. இதனால் வாடிக்கையாளர்கள், எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும், கடைசி தேதி உள்ளிட்ட விவரங்கள் தெரியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி, கட்டணத் தொகை செலுத்தத் தவறியதாகக் கூறி தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விடுகின்றனர். இதனால், தொலைபேசி, இணையதளச் சேவை பெற்றுவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே,  வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ரசீது அனுப்ப பி.எஸ்.என்.எல். நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai