சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
    ராஜபாளையம் டி.பி.மில்ஸ்  சாலையில்  திரையரங்கம் அருகே தெற்கு காவல் நிலைய போலீஸார் ரோந்து சென்றனர். 
    அப்போது இனாம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த கமலசேகரன்  அரசு அனுமதியின்றி மதுபானங்களை விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், 32 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai