விருதுநகர் அருகே விழிப்புணர்வு முகாம்

விருதுநகர் அருகே கூரைக்குண்டு ஊராட்சி அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல்

விருதுநகர் அருகே கூரைக்குண்டு ஊராட்சி அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமிற்கு "சைல்டு லைன்' திட்ட ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமை வகித்தார். இதில், 18 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுப்பது, பணிபுரியும் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள், குழந்தைத் திருமணத்தை தடுப்பது குறித்து விளக்கப்பட்டது. 
குழந்தைத் திருமணம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தகவல் தெரிவிக்கலாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு அலுவலர்கள் உடனடியாக வந்து நடவடிக்கை மேற்கொள்வர். மேலும், பாதிக்கப்படுவோருக்கு சட்ட ஆலோசனை, மருத்துவப் பரிசோதனை, உளவியல் அடிப்படையிலான ஆலோசனைகள் வழங்கப்படும். எனவே, பெண்களுக்கான சேவை மற்றும் பாதுகாப்பு மையங்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதில், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், சமூக நலத்துறை அலுவலர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம், மாவட்ட மகளிர் நல அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கூரைக்குண்டு ஊராட்சிச் செயலர் அல்போன்ஸ் செய்திருந்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com