புறவழிச்சாலை சந்திப்பில் வழிகாட்டிப் பலகை இன்றி வாகன ஓட்டிகள் அவதி
By DIN | Published On : 02nd March 2019 07:23 AM | Last Updated : 02nd March 2019 07:23 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரம் புறவழிச்சாலை சந்திப்பில் வழிக்காட்டிப் பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
அருப்புக்கோட்டை நகருக்குள் செல்லும் சாலையையும், மதுரையை நோக்கிச் செல்லும் சாலையையும் பிரித்தறிய உதவுவதற்கு ராமசாமிபுரம் விலக்கில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டிப் பலகை பல ஆண்டுகளுக்கு முன் வாகன விபத்தில் சேதமடைந்து காணாமல் போனது.
இந்நிலையில் இரவில்தூத்துக்குடி வழித்தடத்திலுள்ள பல்வேறு ஊர்களிலிருந்தும் வரும் வாகன ஓட்டிகள் ராமசாமிபுரம் விலக்கில் வழியைத்,தவற விட்டு விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே ராமசாமிபுரம் விலக்கில் வழிகாட்டிப் பலகை அமைக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.