ராஜபாளையத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
By DIN | Published On : 02nd March 2019 07:31 AM | Last Updated : 02nd March 2019 07:31 AM | அ+அ அ- |

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 66 ஆவது பிறந்த நாள் விழா ராஜபாளையத்தில் அக்கட்சியினரால் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 636 பயனாளிகளுக்கு, ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினரின் 3 மாத ஊதியத்திலிருந்து ரூ.3,15,000 மதிப்பில் நலத் திட்ட உதவிகளை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன் வழங்கினார்.
இவ்விழாவில் நகரச் செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் தங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தனுஷ் குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.