Enable Javscript for better performance
விருதுநகர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 11,518 வழக்குகளில் ரூ.6.47 கோடிக்கு தீர்வு- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 11,518 வழக்குகளில் ரூ.6.47 கோடிக்கு தீர்வு

    By DIN  |   Published on : 11th March 2019 01:16 AM  |   அ+அ அ-   |    |  


    விருதுநகர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 11,518 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.6,47,31,050-க்கு உத்தரவு வழங்கப்பட்டது.
    விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாற்று சமரச தீர்வு மைய கட்டடம் மற்றும் ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டையில் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் அங்குள்ள நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 
    இதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி வாராக்கடன் மற்றும் சிறு வழக்குகள் உள்பட 26,926 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 11,518 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.6,47,31,050 க்கு உத்தரவு வழங்கப்பட்டது.
    மேலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட சமரச தீர்வு மையத்தில் நடைபெற்று வந்த இரு ஜோடிகளின் விவாகரத்து வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டு சேர்த்து வைக்கப்பட்டனர். 
    ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு, விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவர் மற்றும் மாவட்ட அமர்வு நீதிபதி ஆ.முத்துசாரதா தலைமை வகித்தார். நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவர் மற்றும் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஏ.லியாகத் அலி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் எஸ்.சந்திரன், பி.சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி ஜெ.கிறிஸ்டல் பபிதா வரவேற்றார்.
    நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் டி.சம்பத்குமார், சார்பு நீதிபதி சி.கதிரவன், கூடுதல் சார்பு நீதிபதி கே.மாரியப்பன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.இன்பகார்த்திக், குற்றவியல் விரைவு நீதிமன்ற நடுவர் எம்.பரமசிவம், நீதித்துறை நடுவர் ஜி.ஆனந்தி மற்றும் வழக்குரைஞர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp