சுடச்சுட

  

  சாத்தூர் நான்குவழிச் சாலையில் புதிதாகக் கட்டப்பட்ட கழிப்பறையை பயன்பாட்டிற்குக் கொண்டு வரக் கோரிக்கை

  By DIN  |   Published on : 16th March 2019 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாத்தூர் நான்குவழிச் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை பயன்பாட்டுக்குக் கொண்டு வர பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நான்குவழிச் சாலை அமைக்கபட்ட பின்னர் சாத்தூர்-விருதுநகர் சாலையில் சுங்கச்சாவடி அமைக்கபட்டது. பின்னர் சுங்கச்சாவடி வருவாய் மூலம் சாலை பராமரிப்பு, வாகன ஓட்டுநர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. 
  ஆனால் சாத்தூர் அருகே எட்டூர்வட்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப் படவில்லை. இதையடுத்து இப் பகுதியில் நெடுந்தூர பயணிகளின் நலன்கருதியும், 
  வாகன ஓட்டுநர்களின் வசதிக்காகவும் கழிப்பறை கட்டித் தர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து  இப்பகுதியில் சாலையோரத்தில் பொது கழிப்பறை புதிதாக கட்டப்பட்டது. இக்கழிப்பறை கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. 
  எனவே இதில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
  எனவே புதிதாகக்  கட்டப்பட்டுள்ள இக் கழிப்பறையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai