சுடச்சுட

  

  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே  பந்தல்குடியில் வெள்ளிக்கிழமை  நடந்து சென்ற பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
  பந்தல்குடியில் வசிப்பவர் ஜானகிராமன் மனைவி அலமேலு (60). இவர் வெள்ளிக்கிழமை காலையில் பந்தல்குடி அருகே சேதுராஜபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். மதுரை-தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, சேதுராஜபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அலமேலு அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். 
  இது தொடர்பாக அலமேலு கொடுத்த புகாரின் பேரில் பந்தல்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai