சுடச்சுட

  


  அருப்புக்கோட்டை ஸ்ரீசெüடாம்பிகா பொறியியல் கல்லூரி விளையாட்டு விழா சனிக்கிழமை அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
   இந்நிகழ்ச்சிக்குக் கல்லூரிச் செயலாளர் பாஸ்கரராஜன், பொருளாளர் சுந்தரமூர்த்தி, தலைவர் வீரபாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக அளவிலான உடற்கல்வியியல் துறையில் சிறந்த செயல்பாட்டிற்கான விருதுபெற்ற உடற்கல்வி இயக்குநர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.  
  அப்போது அவர், விளையாட்டுத்துறையில் ஒரு மாணவரது தனித்திறன் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமானது கடன உழைப்பும், முயற்சியும், தன்னம்பிக்கையும். அவைதான் மாணவர்களாகிய உங்களை விளையாட்டுத்துறையில் வெற்றிகளைக் குவிக்க உதவும் என்றார். பின்னர் பச்சை, மஞ்சள், நீலம் என மூன்று வித  அணிகளாகப் பிரிக்கப்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர், கல்லூரி ஊழியர்கள்,பேராசிரியர்களுக்கிடையே பல்வேறு விளையாட்டுப்போட்டிகளும், கலை, இலக்கியப் போட்டிகளும் நடைபெற்றன. 
  இதில் வெற்றி பெற்ற கல்லூரி ஊழியர்கள், பேராசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கல்லூரி அளவில் ஒட்டுமொத்த வெற்றியாளருக்கான கேடயத்தை வென்ற மஞ்சள் அணியைச் சேர்ந்த மாணவியருக்கு சிறப்பு விருந்தினர் பாஸ்கரன் வழங்கிப் பாராட்டினார். 
   இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறைத் தலைவர் கணேஷ்குமார், உடற்பயிற்சி இயக்குநர் அன்பழகன், கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ், இதர துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai