சுடச்சுட

  


  ராஜபாளையம் தெற்குப் பகுதியில் போதைப் பாக்கு விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சோலைராஜ் தலைமையில் போலீஸார் சனிக்கிழமை ரோந்து மேற்கொண்டனர். இதில் சிங்க ராஜா கோட்டை திருமண மண்டபம் அருகில் உள்ள கடையில் சோதனை செய்தபோது 3 ஆயிரத்து 316 போதைப் பாக்கு பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
  இதையடுத்து கடை உரிமையாளரான மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரவிக்குமார் (56) மீது வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai