சிவகாசி கல்லூரியில் 840  பேருக்கு பட்டம்

சிவகாசியில் உள்ள காளீஸ்வரி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 840 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 


சிவகாசியில் உள்ள காளீஸ்வரி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 840 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 
 கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் தாளாளர் ஏ.பி.செல்வராஜன் தலைமை வகித்தார்.
  இவ்விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் 840 பேருக்கு பட்டம் வழங்கி, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்  துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் பேசியதாவது: இந்த நாள் உங்களுக்கு மட்டுமல்லாது, உங்களுடைய பெற்றோர்களுக்கும் மறக்கமுடியாத நாள் ஆகும். உயர் கல்வி கற்ற உங்களுக்கு புதிய வாழ்க்கை தொடங்குகிறது எனலாம். வாழ்க்கையில் கல்வி அவசியம். உயர்கல்வியானது உங்களது திறமையை வளர்த்துக்கொள்வதற்காகும். எப்போதும் நீங்கள் உங்களது தனித்தன்மையை விட்டுக் கொடுக்கக் கூடாது. பட்டம் பெற்ற உங்களுக்கு புதிய சிந்தனை, எதிர்காலத் திட்டம் தேவை. நெகிழி ஒழிப்பு, மின்சாரம், தண்ணீர் சிக்கனம் ஆகியவை குறித்த சிந்தனை இருக்க வேண்டும்.  
பெற்றோர்கள் கஷ்டப்பட்டு  உங்களை படிக்க வைத்துள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது. அவர்களை பாதுக்காக்க வேண்டும்.
 நீங்கள் என்னவாக வேண்டும் என முடிவு செய்து, அந்த இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும். புதிய தொழில் நுட்பம் சார்ந்த அறிவு வேண்டும். 
சமூக வலைத்தளங்களை கவனமாக கையாளுங்கள். வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கும் உரிய மரியாதை செலுத்துங்கள். படித்து முடித்துவிட்டோம் என வாசிக்கும் பழக்கத்தை விட்டுவிடக்கூடாது. வாசிக்கும் பழக்கம் உங்கள் வாழ்க்கையை உயர்த்தும் என்றார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் சீ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். துணை முதல்வர் பெ.கி.பாலமுருகன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com