சேத்தூரில் பங்குனி பூக்குழித் திருவிழா தொடக்கம்

ராஜபாளையம் அருகே  சேத்தூர், மேட்டுப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றப்பட்டது.


ராஜபாளையம் அருகே  சேத்தூர், மேட்டுப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றப்பட்டது.
 முன்னதாக கொடிமரத்துக்கு பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. கொடியேற்றத்தை தொடர்ந்து மாரியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கினர்.  பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தண்டியல் சப்பரத்தில் வீதி உலா வந்தார். 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழு தலைவர் நாகப்பன், செயலாளர் சமுத்திரம், பொருளாளர் முத்துக்குமார், கோவில் பூசாரி தில்லையம்பலம் ஆகியோர் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com