ஸ்ரீவிலி. அருகே நூல் வெளியீட்டு விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேப்பங்குளத்தில் உள்ள ராமலிங்க வள்ளலார் திருமடத்தில் பூசம் மற்றும் சிறுகதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேப்பங்குளத்தில் உள்ள ராமலிங்க வள்ளலார் திருமடத்தில் பூசம் மற்றும் சிறுகதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ராஜபாளையம் வட்டாட்சியர் மா. ஆனந்தராஜ் தலைமை வகித்தார். மருத்துவர் ஆர்.எம்.ஆர். சாந்திலால் மற்றும் பத்திரிகை ஆசிரியர் ஐ.க. சுப்பிரமணியன்,  கோ.மா. கோதண்டம், ஆசிரியர் ரா. முத்துகணேஷ்,  போ.கு. சமுத்திரராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இதில், புனல்வேலி ஆல. தமிழ்ப்பித்தன் எழுதிய "முன்னாள் மனிதர்கள்' என்ற சிறுகதை நூலை, தலைமைச் செயலக ராணுவப் பொறியாளர் செ.வ. ராமானுசம் வெளியிட அதை ச. சக்திவேல் பெற்றுக்கொண்டார்.
விழாவில், முன்னாள் மாவட்ட நீதிபதி சி. சிவபிரகாசம், ஓய்வுபெற்ற கல்லூரி தமிழ் துறைத் தலைவர் க. சிவனேசன், தமிழ்ச் செம்மல் க. அழகர், பத்திரிகை ஆசிரியர் ப. சிவக்குமார், பாவணர் கோட்டம் இல. நிலவழகன் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் கா. காளியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கவிஞர் சி. அன்னக்கொடி நூல் விமர்சனம் செய்தார். நூலாசிரியர் ஆல. தமிழ்ப்பித்தன் ஏற்புரையாற்றினார்.
இதில், புலவர் ப. வெள்ளை, கவிஞர் அரு. சந்திரசேகர், ப. அடைக்கலம் மற்றும் சமூகநல ஆர்வலர் க. துள்ளுக்குட்டி என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக, தமிழாசிரியர் கோ.பு. ராஜமணி வரவேற்றார். மனவளக் கலை பேராசிரியர் மா. அருணகிரிநாதன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com