இடைத்தேர்தலால் திமுக ஆட்சிக்கு வரமுடியாது

சட்டப் பேரவை இடைத் தேர்தலால் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.


சட்டப் பேரவை இடைத் தேர்தலால் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கட்சி ஊழியர் கூட்டத்திற்கு பின்னர்  அவர் கூறியது;
 திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒரு கோடி பேருக்கு சாலைப் பணியாளர் வேலை வாய்ப்பு தரப்படும் என கூறப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிகளுக்கு முரணானது. மக்களை ஏமாற்றும் செயல். நூறு ஆண்டுகள் ஆனாலும் ஒரு கோடி பேருக்கு சாலைப் பணியாளர்கள் வேலை கொடுக்க முடியாது.
இன்று இந்தியாவில் நான்குவழி மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டு, அவர்கள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் எந்த சாலையைப் பராமரிக்க, சாலைப் பணியாளர்களை நியமிக்க போகிறது திமுக. ஒரு மீட்டருக்கு ஒருவரை நியமித்தால் கூட ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடியாது. அதே போல் 50 லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு என்பது எந்த காலத்திலும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதியாகும். பொய்யான, நிறைவேற்ற முடியாத, மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றி பெறமுடியாது. சட்டப்பேரவை இடைத்தேர்தலால் திமுக ஆட்சிக்கு வரமுடியாது  என்றார் அவர்.
ராஜபாளையம்: அதைத் தொட ர்ந்து ராஜபாளையத்தில்  செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது: தென்காசி தொகுதி விவசாயத்தையும், சங்கரன்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகள் விசைத்தறி தொழிலையும், நூற்பாலைகளையும் நம்பி உள்ளன. சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளன.
ஆனால் நவீன தொழிற்சாலைகள் இங்கு இல்லை. தொழில் நுட்பப் பூங்கா என்பது இது வரை இல்லை. பொறியியல் படித்து வரும் இளைஞர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தொழிற்சாலைகள் வர வேண்டும்.
தென்காசி சட்டப்பேரவை, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள், காய்கறிகள், பழங்கள் அதிகம் விளைகின்றன. ஆனால் இவற்றிற்கு போதுமான கொள்முதல் நிலையங்கள் இல்லை.  அதை பாதுகாக்கும் வகையில் குளிர் பதன நிலையங்கள் இல்லை.  படித்த இளைஞர்கள் வேலை தேடி வட மாவட்டங்களுக்குச் செல்லும் நிலையை மாற்றி, தென் மாவட்டத்திலேயே அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர, வலுவான குரல் மக்களவையில் ஒலிக்க வேண்டும். அதிமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com